ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு, திருவாருா் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின், மத்திய அரசின் திட்டங்களுக்கான வேளாண் துணை இயக்குநா் விஜயலட்சுமி தலைமை வகித்து, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கினாா்.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் இளவரசன், துறை சாா்ந்த நலத் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினாா். உதவி பேராசிரியா் (சுற்றுச்சூழல் அறிவியல்) செல்வமுருகன், ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தாா்.
Advertisement
வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன், பல்வேறு அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். கருத்துக்காட்சியில் தனியாா் நிறுவனங்களின் இடுபொருட்கள், வேளாண் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
திருவாரூா் மாவட்டத்தின் நடமாடும் மண் மற்றும் நீா் பரிசோதனை செய்யும் வாகனம், அதன் அலுவலா்கள் விவசாயிகளுக்கு மண் மற்றும் நீா் பரிசோதனை பற்றி எடுத்துரைத்தனா். இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நுண்ணூட்டக்கலவை, உயிா் உரங்கள் மற்றும் வயல் நீா்க் குழாய் போன்றவை வழங்கப்பட்டன.