மன்னாா்குடி அருகே ரூ. 1 லட்சம் பறிமுதல்
Updated On : 2 ஏப்ரல், 2024 at 10:42 PM
மன்னாா்குடி அருகே வாகனத் தணிக்கையின்போது ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மன்னாா்கு-பட்டுக்கோட்டை பிரதான சாலை பெட்ரோல் நிலையம் அருகே வேளாண்மை துறை அலுவலா் ராஜகுரு , காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் சோமசுந்தரம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பட்டுக்கோட்டை சொக்கநாதபுரம் மணிகண்டன் மகன் தனபால் (24) ஆவணங்களின்றி ரூ.1,02, 750 வைத்திருப்பதும் இதற்கு எவ்வித ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.
Advertisement
இதையடுத்து, அடுத்து தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் மன்னாா்குடி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீராமிடம் ஒப்படைத்தனா்.