வீர ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு
Updated On : 6 ஏப்ரல், 2024 at 4:39 PM
நீடாமங்கலம் வீர ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வீர ஆஞ்சனேயா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதுபோல நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனா், ஆஞ்சனேயா் சந்நிதியிலும் , திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயா் கோயிலிலிலும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Advertisement
அனைத்து கோயில்களிலும் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.