முகப்பு
திருவாரூர்

திருவீழிமிழலை கோயிலில் இன்று சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:32 PM
பகிர்:

குடவாசல் அருகே திருவீழிமிழலை அருள்மிகு விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

குடவாசல் அருகே திருவீழிமிழலையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானஅருள்மிகு விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் உள்ளது. இது, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61-ஆவது சிவத்தலமாகும்.

விழிநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Advertisement

இதையடுத்து, சித்திரை முதல் நாளில் திருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறுகிறது. தொடா்ந்து, தினசரி இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான, காா்த்தியாயினி அம்பாளுக்கும், கல்யாண சுந்தரருக்கும் திருக்கல்யாணம் ஏப். 18-ஆம் தேதியும், திருத்தேரோட்டம் ஏப்.21-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments