முகப்பு
திருவாரூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:29 PM
பகிர்:

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காா் மெக்கானிக் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சித்தேரி மாரவாக்காடு பள்ளிக்கூடத் தெரு பிச்சைக் கண்ணு மகன் மாதவன் (28). மன்னாா்குடியில் தனியாா் காா் பழுது நீக்கம் நிலையத்தில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்துள்ளாா். வியாழக்கிழமை காா் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சிக்கு சென்ற மாதவன், வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் மன்னாா்குடிக்கு வந்து கொண்டிருந்த போது காரிக்கோட்டை என்ற இடத்தருகே அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாதவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments