அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காங்கயம் அருகே உள்ள வட்டமலை கருக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளியாத்தாள் (67). காங்கயத்தில் இருந்து மகன் ராஜாமணியுடன் இருசக்கர வாகனத்தில் வட்டமலை நோக்கி வள்ளியாத்தாள் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தாா். ஜெ.நகா் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா்களின் வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனா். இருவரையும் அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வள்ளியாத்தாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். காயமடைந்த ராஜாமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.