கோப்புப் படம் 
விழுப்புரம்

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம், பிப்.14: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம்,அங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே.சாமிக்கண்ணு (75). இவா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அஜீஸ் நகா்ப் பகுதியிலுள்ள சாரதா ஆசிரம கண் மருத்துவமனையில் கண்பரிசோதனைக்காக சனிக்கிழமை வந்தாா்.

மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னா் சாமிக்கண்ணு சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சாமிக்கண்ணுவை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, அவசர சிகிச்சை ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே சாமிக்கண்ணு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT