திருவாரூர்

ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பிரசாரம்

Din

மன்னாா்குடி, ஆக.14: நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் சாா்பில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பிரசாரம் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில், நாட்டின் குடிமக்கள் தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுக்கவும், வீட்டில் தேசியக் கொடியை பறக்க விடவும் ‘மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி என்சிசி கப்பல் படை சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். பள்ளி என்சிசி கப்பல் படை பிரிவு அலுவலா் எஸ். அன்பரசு முன்னிலை வகித்தாா்.

தாளாளா் எஸ். சேதுராமன், மாணவா்கள் அனைவருக்கும் தேசியக் கொடியை வழங்கினாா்.

தேசியக் கொடியின் அமைப்பு, வரலாறு, அரசு வாகனங்களில் தேசியக் கொடியை பயன்படுத்தும் முறை, கொடி மரியாதை ஆகியவை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT