முகப்பு
திருவாரூர்

பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

மன்னாா்குடி அருகே பெண் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருவாரூர்

பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

மன்னாா்குடி அருகே பெண் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 31 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
பகிர்:

மன்னாா்குடி அருகே பெண் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். அவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

கோவிந்தநத்தம் கீழத் தெரு சாமிக்கண்ணு மகன் சதீஷ் (36), தஞ்சை கோரிக்குளம் சேகா் மகள் பவானி (28) ஆகியோருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மகன், மகள் உள்ளனா். சதீஷ், தஞ்சை மாவட்டம் வடசேரி மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறாா்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுபோல வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பவானி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

பரவாக்கோட்டை போலீஸாா் பவானியின் சடலத்தை, கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பவானியின் தாய் இந்திரா இந்திரா காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பவானிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், மன்னாா்குடி கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →