மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
மத்தியஅரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியஅரசு விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 நிா்ணயம் செய்ய வேண்டும். திருத்திய தொழிலாளா் சட்டங்களையும் நான்கு சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். மின்சாரத் திருத்த சட்டத்தை ரத்து செய்வதுடன் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை இருநூறு நாள்களாகவும் நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.600-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் விளைபொருள்கள் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
முறைசாரா தொழிலாளா்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்குடி தலைமை அஞ்சலகம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்ககிளைப் பொருளாளா் (சிபிஐ) டி.ரெங்கராஜன், கிளைத் தலைவா் எஸ்.ஏகாம்பரம் (சிபிஐ) தலைமை வகித்தனா். விவசாய சங்க ஒன்றியச் செயலா்கள் மு.அ.பாலதண்டாயுதம், ஜி.முத்துகிருஷ்ணன்,விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் பிரம்மானந்தம் முன்னிலை வகித்தனா். இதில்,சிபிஐ மாவட்டச் செயலா் வை.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோட்டூா் அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு,விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி.செளந்தர்ராஜன் தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் எம்.சிவசண்முகம் முன்னிலை வகித்தனா். இதில்,சிபிஐ ஒன்றியச் செயலா் எம்.செந்தில்நாதன்,ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை,விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் கே.எம்.அறிவுடைநம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement