தமிழக கட்டடத் தொழிலாளா்கள் சங்க கூட்டம்
கூத்தாநல்லூரில் தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூரில் தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கொரடாச்சேரி பிரதான சாலை, குறும்படை அய்யனாா் கோயிலில், சங்கத்தின் மாநிலப் பொருளாளா் ஆா். சேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவா்கள் கே. மாரியப்பன், எம். தனபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் ஆா். விஜயபாண்டியன் வரவேற்றாா்.
இதில், சங்கத்துக்கு உறுப்பினா்களை அதிகம் சோ்ப்பது, நலவாரியத்தில் இணைவதற்கும், அட்டைகளை புதுப்பிப்பதற்கும் கிராம நிா்வாக அலுவலரிடம் அணுகுவதை ரத்து செய்ய வேண்டும், வீடுகட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளா்கள் யு. ராகவன், டீ. தா்மராஜ், நகரச் செயலாளா் யு. பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.