சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின.
சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின.
சென்னையை அடுத்த நாவலூரில் எரிவாயு சிலிண்டர் ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 வயது பெண் குழந்தை, ஒன்றரை வயது ஆண் குழந்தை என 2 குழந்தைகள் பலியாகின.
மேலும் படுகாயமடைந்த 7 வயது சிறுவன் உள்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்து சிறுசேரி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 3 வீடுகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சிலிண்டர் விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
summary