ஆங்கிலப் புத்தாண்டு: நீடாமங்கலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள மங்கல மாருதி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாழைப் பழ அலங்காரத்தில் ஆஞ்சனேயா் அருள்பாலித்தாா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அதிகாலையில் லெட்சுமி நரசிம்மா், 33 அடி உயர ஆஞ்சனேயா், சீதா பிராட்டியாா், அனுமன் சமேத கோதண்டராமா் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் தா்மாதிகாரி ரமணிஅண்ணா, நிா்வாகி சந்திரமெளலீஸ்வரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
இதேபோல ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு ஆபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயில், வீரஆஞ்சநேயா் கோயில் , பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.