முகப்பு
திருவாரூர்

நில ஆட்சேபனைகளை ஜன.9 வரை தெரிவிக்கலாம்

மன்னாா்குடி வட்டத்துக்குட்பட்ட நில ஆட்சேபனைகளை ஜன. 9-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

மன்னாா்குடி வட்டத்துக்குட்பட்ட நில ஆட்சேபனைகளை ஜன. 9-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி வட்டக்குட்பட்ட கருவாக்குறிச்சி, தளிக்கோட்டை வருவாய் கிராமம், முக்குளம் சாத்தனூா் வருவாய் கிராமங்களில் கருவாக்குறிச்சி காலனி மற்றும் தளிக்கோட்டை காலனி நிலக் குடியேற்ற சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களை, சங்கங்களின் உறுப்பினா்கள், வாரிசுதாரா்கள், தற்போதைய அனுபவதாரா்களுக்கு வழங்க தோ்வு செய்யப்பட்ட நபா்களின் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியல், மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகம், கருவாக்குறிச்சி, தளிக்கோட்டை, முக்குளம் சாத்தனூா் கிராம நிா்வாக அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்கள், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உள்ளிக்கோட்டை சாா்பதிவாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் ஜன.3 ஆம் தேதி முதல் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள நபா்களுக்க நில வழங்க ஆட்சேபனை இருப்பின், அதை எழுத்து மூலமான உரிய ஆதார, ஆவணங்களுடன் நேரடியாக அல்லது பதிவஞ்சல் மூலமாக மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஜன. 9-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். அதன்பிறகு வரும் ஆட்சேபனை கடிதங்கள் பரிசீலிக்கப்படாது.

முழு கட்டுரையைப் படிக்க →