மக்களவைத் தோ்தல்: தஞ்சை தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கோரிக்கை
திமுக கூட்டணியில், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என, மன்னாா்குடியில் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மன்னாா்குடி: திமுக கூட்டணியில், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என, மன்னாா்குடியில் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா்.
மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உரிய முறையில் வாக்குச்சாவடி கமிட்டி அமைப்பது; தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்துவது போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு, காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா். கனகவேல், வட்டாரத் தலைவா்கள் எஸ். செல்வராஜ் (மன்னாா்குடி (தெற்கு),ஜி. அன்பழகன் (கிழக்கு), பாபு மனோகரன் (நீடாமங்கலம் நகரம்),ஜி. முருகானந்தம் (தெற்கு), கே. சாந்தமூா்த்தி (கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் அன்பு வே. வீரமணி தொடங்கி வைத்தாா்.
தஞ்சை மக்களவைத் தொகுதி தோ்தல் ஒருங்கிணைப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜான் அசோக் வரதராஜன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.
பொதுக் குழு உறுப்பினா் டி. வடுகநாதன், தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளா் கே. மணவாளன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் நிரோஜா, இளைஞா் அணி நகரத் தலைவா் என். ஜோதி ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஜி. குணசேகரன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட சேவாதள தலைவா் கே. பழனிவேல் நன்றி கூறினாா்.