முகப்பு
திருவாரூர்

ஜூலை 12-ல் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 14 ஜூன், 2024 at 5:19 PM
பகிர்:

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறுகிறது.

நவகிரகங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிந்தநிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு 2021-ஆம் ஆண்டு பாலாயம் செய்யப்பட்டு ராஜகோபுரம், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் விமானங்கள் புதுப்பிக்கும் பணிகள் பெருமளவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், திருப்பணிகள் முழுவதும் நிறைவு செய்து ஜூலை 12-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.