முகப்பு
கன்னியாகுமரி

மண்டைக்காட்டில் இன்று வலியபடுக்கை பூஜை

Updated On : 6 மார்ச், 2026 at 12:58 AM
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற பெரிய சக்கர தீவட்டி ஊா்வலம்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 8:51 PM

தக்கலை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் 6 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) இரவு வலியபடுக்கை எனும் மகா பூஜை நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை இரவு அத்தாழ பூஜை, வெள்ளி பல்லக்கில் அம்மன் பவனி வந்த பின், நள்ளிரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் அம்மனுக்கு விருப்பமான நைவேத்தியங்கள் படைத்து வலியபடுக்கை பூஜை நடைபெறும். பூஜை முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.

பூஜையில் வைக்கப்பட்ட படையல்கள் சனிக்கிழமை ( மாா்ச் 7) காலை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Advertisement