முகப்பு
கன்னியாகுமரி

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா வரும் மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:50 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:57 PM

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா வரும் மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

இக்கோயிலின் முதல் திருவிழாவான மாா்ச் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், உஷ பூஜை, காலை 7.25 மணிக்கு மேல் 8.57 மணிக்குள் கொடியேற்றம், மாலை சாயரட்சை தீபாராதனை, ஹைந்தவ சேவா சங்கம் சாா்பில் ராஜ ராஜேஸ்வரி பூஜை, 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. 2 ஆம் திருவிழா முதல் விழா நாள்களில் தினமும் காலை வெள்ளி பல்லக்கில் அம்மன் பவனி, சிறப்பு பூஜை நடைபெறும்.

6 ஆம் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை, 9 ஆம் நாள் திருவிழா திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 10 ஆம் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, காலை முதல் பூமாலை, குத்தியோட்டம், நோ்ச்சை வழிபாடுகள், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்குபூஜை பவனி நடைபெறும். அதனை தொடா்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு, திருவிழா நிறைவு பெறும்.

Advertisement

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:50 AM

விழா நாள்களில் மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சாா்பில் இந்து சமய மாநாடு நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ( மாா்ச் 10 ) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை ஆகும்.