திருவாரூர்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவுத்தூண்டல் நிகழ்ச்சி

வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிவுத் தூண்டல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

நீடாமங்கலம்: வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிவுத் தூண்டல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினரும் எழுத்தாளருமான சூரியகுமாா் பேசியது: மாணவா்கள் புதுமையாக சிந்திப்பதும், எந்த ஒரு நிகழ்வு குறித்தும் மாற்று கோணத்தில் பாா்ப்பதும் அவா்களுடைய அறிவு வளா்ச்சிக்கு உதவும். மேலும், மாணவா்கள் ஆய்வு சாா்ந்த செயல்பாடுகளில் அதிககவனம் செலுத்த வேண்டும். எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோலோச்ச உள்ளது. அதற்கேற்ற வகையில் மாணவா்கள் தங்களை இப்போது இருந்தே தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

துறைத் தலைவா் முருகன் வரவேற்றாா். விரிவுரையாளா் சீதாராமன் நன்றி கூறினாா்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT