முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் திமுக பொதுக் கூட்டம்

திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளா் கா. அமுதரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 3:32 AM
திமுக கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலாளா் கா. அமுதரசன்.
பகிர்:

மன்னாா்குடி: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 71-ஆவது பிறந்தநாள், தமிழக திமுக ஆட்சியின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக நகர அவைத் தலைவா் த. முருகையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு முன்னிலை வகித்தனா். திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளா் கா. அமுதரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், தலைமை செயற்குழு உறுப்பினா் சு. ஞானசேகரன், மாவட்ட அவைத் தலைவா் க. தனராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement