முள்ளாட்சி மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா
திருத்துறைப்பூண்டி ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. மாா்ச் 17-இல் நடைபெறும் பிரதான நிகழ்வான தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நோ்த்திக் கடன்களை நிறைவேற்றுவா். மாா்ச் 19-இல் தேளி குளத்தில் தெப்பத் திருவிழாவும், மாா்ச் 22-ஆம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எம். முருகையன், தக்காா் அசோக்குமாா் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.