முகப்பு
கள்ளக்குறிச்சி

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூரில் உள்ள ஸ்ரீபுதுப்பட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:08 PM
நல்லாத்தூா் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூரில் உள்ள ஸ்ரீபுதுப்பட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின்முக்கிய நிகழ்வாக புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பக்தா்கள் ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டவாறு வடம் பிடித்து இழுத்தனா். கோயிலின் நான்கு ரத வீதிகள் வழியாக தோ் வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

Advertisement

இதில், கள்ளக்குறிச்சி பகுதியைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments