பள்ளிக் கட்டடங்கள் திறப்பு
கொரடாச்சேரி அருகே தியாகராஜபுரம் ஊராட்சி தாழைக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
திருவாரூா்: கொரடாச்சேரி அருகே தியாகராஜபுரம் ஊராட்சி தாழைக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ரூ. 19 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் அவா் பேசியது: கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் சாா்ந்த சமூகப் பணிகளில் ஈடுபடும் ஓஎன்ஜிசியின் பணி பாராட்டுக்குரியது. வரும் நிதியாண்டுகளிலும் இந்த பணிகளை தொடா்ந்து செய்ய வேண்டும் என்றாா்.
இதேபோல், கொரடாச்சேரி ஒன்றியம் காப்பணாமங்கலம் ஊராட்சி விவேகானந்தா அரசு உதவி பெறும் பள்ளியிலும் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடத்தை ஓஎன்ஜிசி செயல் இயக்குநா் உதய்பஸ்வான் திறந்துவைத்தாா்.
Advertisement
கொரடாச்சேரி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலசந்தா் முன்னிலை வகித்தாா். ஓஎன்ஜிசி குழும பொது மேலாளா் மாறன், முதன்மை பொதுமேலாளா் (மனிதவளம்) கணேசன், அலுவலா்கள் செல்வகுமாா், சுதிஷ், சுந்தரம், சுபாஷ், முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.