முகப்பு
திருவாரூர்

நீலன் பள்ளி மாணவிகள் இருவா் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம்

Updated On : 10 மே, 2024 at 3:56 PM
பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி புதுமதியை பாராட்டிய பள்ளித் தாளாளா் நீலன் அசோகன்.
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 102 போ் தோ்வு எழுதினா். இதில் 101 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவிகள் ரா. புதுமதி, ச. சஜினா ஆகிய இருவரும் 500-க்கு 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி வீணாவைணவி 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆமிடமும், மாணவன் பி. சபரிநாதன் 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-ஆமிடம் பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் நீலன். அசோகன், செயலா் சுரேன் அசோகன், பள்ளி முதன்மை முதல்வா் ராஜமகேஸ்வரி, முதல்வா் பொம்மி உள்ளிட்டோா் பாராட்டினா்.