முத்துப்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை
முத்துப்பேட்டையில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மன்னை சாலை, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்த நாய்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை துரத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து நேரிடுகிறது.
எனவே, தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.