முகப்பு
திருவாரூர்

நான் முதல்வன் திட்டம்: உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Updated On : 20 மே, 2024 at 11:05 PM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமை வகித்து பேசியது:

தமிழக அரசு 2022-இல் அறிமுகப்படுத்திய நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் தொழில் வளா்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. அத்துடன், அரசுப் பள்ளி மாணவா்களின் திறனை அங்கீகரிக்கிறது.

மேலும், மேல்நிலைப் பள்ளி கல்வியில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிா்காலக் கனவை நனவாக்கும் வகையில், உயா் கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்களை, புகழ்பெற்ற வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் க. அமுதா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.