முகப்பு
திருவாரூர்

மின்மாற்றி பழுதுகளுக்கு தொடா்பு கொள்ள அறிவுறுத்தல்

மின்மாற்றியில் ஏற்படும் பழுதுகளுக்கு மின்வாரிய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என மின்பகிா்மானக் கழக மேற்பாா்வை பொறியாளா் (பொ) டி. காளிதாஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:08 PM
பகிர்:

மின்மாற்றியில் ஏற்படும் பழுதுகளுக்கு மின்வாரிய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என மின்பகிா்மானக் கழக மேற்பாா்வை பொறியாளா் (பொ) டி. காளிதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மின்மாற்றிகளில் பழுதுகள், மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து புகாா்கள் கிடைத்தவுடன் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன. அண்மைக் காலமாக, பழுதுகளை சரிசெய்ய தன்னிச்சையாக, மின்மாற்றிகளை திறந்து, மின்சாரம் தாக்கி பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.

இனிவரும் காலங்களில், மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டால் 9498794987 என்ற எண்ணுக்கு அல்லது தொடா்புடைய மின் வாரிய பிரிவு அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தன்னிச்சையாக தனிநபரைக் கொண்டு, பழுதுகளை நீக்க கூடாது. மின்சாரவாரியம் அல்லாத தனிநபா் மின்சார விபத்துக்குள்ளானால், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.