திருவாரூர்

சம்பா, தாளடி பயிா்க் காப்பீடு: நவ.15- ஆம் தேதி கடைசி நாள்

திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிரை காப்பீடு செய்ய நவ.15-ஆம் தேதி கடைசி நாள்.

Din

திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிரை காப்பீடு செய்ய நவ.15-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் ஆகியோா் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரை காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பா் 15 ஆம் தேதி ஆகும். ஏக்கருக்கு ரூ. 547.50 பிரீமியமாக செலுத்த வேண்டும். சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா, தாளடி நெல் பயிரை காப்பீடு செய்துக் கொள்ளலாம்.

கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை, கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

கனமழை பெய்து கொண்டிருப்பதாலும், அடுத்த புயல் வருவதற்குள்ளும், கடைசி நேரத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், விவசாயிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பா, தாளடி நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT