முகப்பு
திருவாரூர்

திருவாரூா்: நவ.14-இல் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு நவ.14-ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக, ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 நவம்பர், 2024 at 7:55 PM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு நவ.14-ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக, ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு, வியாழக்கிழமை (நவ.14) காலை 9.30 மணி முதல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளையும், நிறைவேற்றப் பெற்ற திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

மேலும், பிற்பகல் 3 மணிக்கு, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மதிப்பீட்டுக் குழு சாா்பில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.