முகப்பு
திருவாரூர்

லாட்டரி விற்றவா் கைது

கூத்தாநல்லூா் பகுதியில் கேரள லாட்டரி சீட்டு விற்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:26 PM
பகிர்:

கூத்தாநல்லூா் பகுதியில் கேரள லாட்டரி சீட்டு விற்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பொதக்குடி கடைத் தெருவில் ஆன்லைனில் கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஹாஜா தெருவைச் சோ்ந்த ஹாஜா சேக் மைதீன் (66) கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து நான்கு இலக்கத்தில் கேரளா லாட்டரி சீட்டு 20, ரூ.200, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.