முகப்பு
செய்திகள்

தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்: பினராயி விஜயன்

தி கேரள ஸ்டோரி - 2 குறித்து பினராயி விஜயன்...

Updated On : 19 பிப்ரவரி 2026, 3:53 pm IST
பினராயி விஜயன்
பகிர்:

கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இதில், கேரளத்தைச் சோ்ந்த 32,000 ஹிந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

வெளியானபோதே பல சர்ச்சைகளைக் கிளப்பியதுடன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான திரைப்படமாக உள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், வணிக ரீதியாக வெற்றிப்படமானதுடன் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றது.

Advertisement

Advertisement

தற்போது, இதன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இதனை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.

முதல் பாகத்தினைப் போலவே டிரைலரில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, ஹிந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது தொடர்பான வசனங்களும் கட்டாயப்படுத்தி ஹிந்துப் பெண்ணை மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் பதிவாகியுள்ளன. இதனைப் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், “தி கேரள ஸ்டோரி திரைப்படம் - 2 சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் கேரளத்தில் கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுவதாக அரசு எதிராக வெறுப்பினைப் பரப்பினர். இதுவும் மதச்சார்பின்மையைக் கெடுக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதால், கேரளா ஸ்டோரி - 2 திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.