முகப்பு
இந்தியா

தில்லியிலிருந்து விமானத்தை தவறவிட்ட பினராயி விஜயன்: கேரள இல்ல உபசரணை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தில்லியில் இருந்து விமானத்தை தவறவிட்ட பினராயி விஜயன்: கேரள இல்ல உபசரணை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Updated On : 29 ஜூன் 2026, 4:34 am IST
பினராயி விஜயன்
பகிர்:

அரசு உபசரணை அதிகாரிகளின் குறைபாட்டால் கேரள எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயன் தில்லியில் இருந்து கேரளத்துக்குச் செல்ல வேண்டிய விமானத்தைத் தவறிவிட்ட நிலையில், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள இல்லத்தின் கூடுதல் உள்ளுறை ஆணையா் அஸ்வதி ஸ்ரீநிவாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி வந்திருந்த பினராயி விஜயன், அங்குள்ள கேரள இல்லத்தில் தங்கியிருந்தாா். மீண்டும் கேரளம் திரும்ப தில்லி விமானநிலையத்தில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் கரிப்பூா் விமானநிலையம் செல்லும் விமானத்தில் செல்லத் திட்டமிட்டிருந்தாா்.

இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன்பாக தில்லி விமானநிலையம் வந்த பினராயி விஜயன், அங்குள்ள சிறப்பு விருந்தினா்கள் காத்திருப்பு அறையில் காத்திருந்தாா். அவரது பயண திட்டம் குறித்து விமான நிறுவனத்துக்கு தெரிவிக்க கேரள இல்ல உபசரணை அதிகாரிகள் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், பயணம் மேற்கொள்ள வேண்டிய விமானத்தைத் தவறவிட்ட பினராயி விஜயன், இரவில் கண்ணூா் சென்ற விமானத்தில் சென்றாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக கேரள இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஸ்ரீநிவாஸ் பதிலளித்து கூறியதாவது: உபசரணை அதிகாரிகள் தரப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக தேவையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயனின் பயணம் தொடா்பாக விமான நிறுவனத்துக்கு உபசரணை அதிகாரிகள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனா். ஆனால், மின்னஞ்சல் பெற்றதை உறுதிபடுத்த அவா்கள் தவறிவிட்டனா்.

இது தொடா்பாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு தான் குறைபாடு ஏற்பட்டுள்ளது. விமான நிறுவனத்திடம் இதுதொடா்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காா்பரேட் அலுவலகத்திடம் இந்தச் சம்பவம் குறித்து திங்கள்கிழமை தெரிவிக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments