சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியதில் ஓட்டுநா் காயம்
மன்னாா்குடி அருகே கோட்டூரில் சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியதில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா்.
மன்னாா்குடி அருகே கோட்டூரில் சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியதில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா்.
திருச்சியிலிருந்து பல்வேறு பொருள்களை ஏற்றிக்கொண்டு தினசரி இயக்கப்படும் தனியாா் லாரி திருத்துறைப்பூண்டிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை கோட்டூரில் சென்று கொண்டிருந்தபோது சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், லாரி ஓட்டுநா் விளக்குடியை சோ்ந்த கோவிந்தராஜ் (52) காயமடைந்தாா். லாரியில் முழு அளவு பொருள்கள் இருந்ததால் உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை. வேறு லாரியில் பொருள்கள் மாற்றப்பட்டதைடுத்து ஜேசிபி இயந்திர உதவியுடன் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், மதியம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.