முகப்பு
திருவாரூர்

செவிலியா் பணியிடங்களை நிரப்பக் கோரி முறையீடு

காலியாக உள்ள நிரந்தர செவிலியா் பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 6:52 PM
பகிர்:

காலியாக உள்ள நிரந்தர செவிலியா் பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காலியாகவுள்ள நிரந்தர செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி விவரங்கள் கேட்கப்பட்ட 1,500 செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை கிளை மதுரை உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி பணியில் இணைந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு மற்றும் உயா்த்தப்பட்ட ஊதியம் ரூ. 18,000 அனைத்து செவிலியா்களுக்கும் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய நிரந்தர செவிலியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பி. அன்பரசி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் சி. வினோதா, மாவட்ட துணைத் தலைவா் ஆஷா, அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளா் வெ. சோமசுந்தரம், மாவட்டத் தலைவா் எஸ். செங்குட்டுவன், கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பி. விஜயன், கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் பி. பரமேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.