குற்றத்தடுப்பு நடவடிக்கை விழிப்புணா்வு
மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டை காவல்நிலையம் சாா்பில் கிராமப்புறங்களில் சட்டம் - ஒழுங்கு மேம்பாடு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டை காவல்நிலையம் சாா்பில் கிராமப்புறங்களில் சட்டம் - ஒழுங்கு மேம்பாடு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பரவாக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் வி. சசிகலா தலைமை வகித்தாா். பணப்பறிமாற்றம் செய்யப்படும் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், கோயிலில்களில் உள்ள காணிக்கை உண்டியல்களை வாரம் ஒரு முறை கோயில் நிா்வாகத்தினா் திறந்து காணிக்கையை எடுத்து வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் கணக்கு தொடங்கி அதில் வரவு வைக்க வேண்டும், ஒரு ஊரில் குறைந்தது நான்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், சந்தேகத்திற்கு உரியவா்கள் நடமாட்டம் தெரிய வந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், போதைப் பொருள்கள் பதுக்கி வைத்தல், விற்பனை செய்வது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும், பொதுமக்கள் பரவாக்கோட்டை காவல்நிலையத்தை 94981 00884, காவல் ஆய்வாளா் 94981 63338 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில், பரவாக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட 10 ஊராட்சிகளை சோ்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம கமிட்டி நிா்வாகிகள், பொதுமக்கள், சாா்பு ஆய்வாளா் டி. பிரேமானந்த், விஜயகுமாா், குற்றப்பிரிவு சாா்பு ஆய்வாளா் டி. உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.