முகப்பு
திருவாரூர்

எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:10 PM
மன்னாா்குடியில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

அதிமுகவின் 53-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக திருவாரூா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமையில் அதிமுகவினா் அக்கட்சி அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக வந்து எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், அதிமுக மாநில அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம், நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், மகளிரணி மாவட்டத் தலைவா் டி. சுதா, இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலா் அ.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →