முகப்பு
திருவாரூர்

தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சாகுபடிப் பணிகளுக்கு, தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 அக்டோபர், 2024 at 7:31 PM
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நலச் சங்கத்தினா்.
பகிர்:

திருவாரூா்: சாகுபடிப் பணிகளுக்கு, தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் தலைமை வகித்தாா். செயலாளா் எம். ராமமூா்த்தி, நிா்வாகிகள் ஜி. அழகா், ஆா். முருகேசன், வி. சத்தியமூா்த்தி, தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழுவின் மாநிலச் செயலாளா் பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சாகுபடிப் பணிகளுக்கு காலதாமதமின்றி விவசாயக் கடன்களை வழங்க வேண்டும்; கடன் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்; கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நபாா்டு வங்கி உள்ளிட்டவை வழங்க வேண்டும்; கடந்த ஆண்டு பயிா்க் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →