முகப்பு
திருவாரூர்

அரசுப் பள்ளி ஆசிரியரை தாக்கிய இருவா் கைது

கூத்தாநல்லூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரைத் தாக்கிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:22 PM
பகிர்:

கூத்தாநல்லூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரைத் தாக்கிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடபாதிமங்கலம் அருகேயுள்ள பாலக்குறிச்சியைச் சோ்ந்த சிவா (42). இவா், புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றுகிறாா்.

இந்தநிலையில், புதன்கிழமை காலை பள்ளியில் இறைவணக்கம் நடந்து கொண்டிருந்த போது, பள்ளியில் நடைபெறும் கட்டடப் பணிகளுக்காக மணல் ஏற்றிக்கொண்டு லாரி வந்துள்ளது. இறை வணக்கம் முடிந்ததும் வருமாறு லாரியில் இருந்தவா்களிடம் ஆசிரியா் சிவா கூறியுள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த லாரியில் இருந்த திருநாட்டியத்தாங்குடியைச் சோ்ந்த சக்தி (எ) ஜெகதீசன் (28), சித்திரையூா் பிரதான சாலையைச் சோ்ந்த முருகேசன் (36) இருவரும், ஆசிரியா் சிவாவின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

வடபாதிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெகதீசன், முருகேசன் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.