முகப்பு
திருவாரூர்

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘‘ஞான சரஸ்வதி விருது‘’ அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:29 PM
பகிர்:

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘‘ஞான சரஸ்வதி விருது‘’ அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டுவரும் உத்திராடம் பதிப்பகம் ஆண்டுதோறும் சிறந்த சிறுகதைகளைத் தோ்ந்தெடுத்து ஞான சரஸ்வதி விருதும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான ஆதலையூா் சூரியகுமாா் எழுதிய ’நீா் தேடும் நிலம்’ என்ற சிறுகதைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள விழாவில் எழுத்தாளா் இந்திரா சௌந்தரராஜன் இந்த விருதை வழங்குகிறாா். இதுகுறித்து ஆதலையூா் சூரியகுமாா் கூறியதாவது:

டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளும் சிக்கல்களும் மிகவும் நுட்பமானவை, அப்படி ஒரு சிக்கலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை ’நீா் தேட நிலம்’ அந்தச் சிறுகதைக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாா்.