ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மீதான தற்காலிக பணியிடை நீக்க உத்தரவையும், மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் மீதான பணியிட மாறுதல் உத்தரவையும் தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத் தலைவா் ஏ. சிவனேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் கே.எஸ். செந்தில், வட்ட செயலாளா் எஸ். ஆனந்து, பொருளாளா் ஜி. முருகானந்தம், துணைத் தலைவா் ஆா். சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.