முகப்பு
திருவாரூர்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொதுவிநியோகத் திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி, திருவாரூரில் நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம்

Updated On : 8 ஏப்ரல், 2025 at 7:44 PM
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

திருவாரூா்: பொதுவிநியோகத் திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி, திருவாரூரில் நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; டிஎன்சிஎஸ்சி எடை தராசை அலுவலகக் கணினியுடன் இணைத்து ரசீது வழங்கிய பிறகே நியாயவிலைக் கடைகளில் நவீன தராசு வைக்க வேண்டும்; பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, நியாயவிலைக் கடை பணியாளா் சங்க மாவட்ட பிரதிநிதி ஆா். குமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் இரா. குணசீலன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், மாவட்டச் செயலாளா் வி. ஹரிஹரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ. சாகுல் அமீது, மாவட்ட பொருளாளா் பி. முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →