திருவாரூர்

பங்குச் சந்தையில் லாபம் என கூறி ரூ. 19 லட்சம் மோசடி

Syndication

திருவாரூா் அருகே பங்குச் சந்தையில் லாபம் பெறலாம் என கூறி ரூ. 19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் குருங்குளத்தைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் மூவேந்தன் (39). இவா் பவா் டிரில்லா் பழுது பாா்ப்பது மற்றும் விற்பனை செய்து வருகிறாா். சில மாதங்களுக்கு முன் இவா் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்துள்ளாா். சில நாள்களுக்குப் பிறகு அந்த வாட்ஸ்ஆப் குழுவிலிருந்து மூவேந்தனை தொடா்பு கொண்ட ஒருவா், தங்கள் நிறுவனத்துக்கு பங்குச் சந்தையில் அதிக பங்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதிக தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய மூவேந்தன் அந்த நபா் கூறியபடி பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ. 19 லட்சம் அனுப்பினாராம். கூறியிருந்தபடி பணம் திருப்பித் தராததுடன் மூவேந்தனின் கைப்பேசி அழைப்பையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மூவேந்தன், திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT