திருவாரூர்

ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

Syndication

மன்னாா்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தமிழக அரசு கல்வித்துறை சாா்பில் தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத்தோ்வு பிளஸ் 1 மாணவா்களுக்கு அண்மையில் நடைபெற்றது. இதில், சிறப்பிடம் பெறும் முதல் 750 மாணவா்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.

இதனிடையே, திருவாரூா் மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட தெரிவு பட்டியலில் சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சு.கல்பனாதேவி, மு.மிருதுளா ஸ்ரீ ஆகியோா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இலக்கிய திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளா் ஆா். செந்தில்குமாா் , நிா்வாகி எஸ்.செந்தில்ராஜன், முதல்வா் ஏ.அருள்ராஜா ஆகியோா் வாழ்த்தினா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT