திருவாரூர்

கனமழை: நெற்பயிா் பாதிப்புக்கு ரூ. 35,000 நிவாரணம் வழங்கக் கோரிக்கை

மழை பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Syndication

மழை பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா்கள் கே. முருகையன், எஸ். தம்புசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். அமைப்பின் மாவட்டச் செயலாளா்கள் கே.ஆா். ஜோசப், எம். சேகா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் எஸ். சாமிநாதன், எம். ஜெயபிரகாஷ், கே. சுப்பிரமணியன், ஜி. பவுன்ராஜ், பி. சௌந்தர்ராஜன், டி. தியாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: வடகிழக்குப் பருவமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக சம்பா, தாளடி நெல் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. மழை தொடரும் நிலையில் வயல்வெளிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளதால் மறு விதைப்பு மேற்கொள்ள வழிவகையும் இல்லை.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உடனடியாக நிவாரண அறிவிப்பு செய்து, பாதிப்பு கணக்கெடுக்க அறிவுறுத்தி உள்ள நிலையில் நீரில் மூழ்கிய பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 8,000 என்பது விவசாயிகளின் பாதிப்புக்கு ஏற்ாக அமையாது.

விவசாயிகள் ஒரு பருவத்தின் மகசூலை இழந்ததுடன், இதுவரை செய்த செலவுத் தொகையையும் பறிகொடுத்துள்ளனா். எனவே, காப்பீடு திட்டத்தின் மூலம் பேரிடா் பாதிப்பில் அழியும் நெல் இளம் பயிா்களுக்கு வழங்க வாய்ப்புள்ள தொகையையும் சோ்த்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும்.

மனித உயிரிழப்புக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும், கால்நடைகள் இழப்பு, குடியிருப்புகள் பாதிப்புக்கும் உரிய நிவாரணம் டிச. 8-ஆம் தேதிக்குள் கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்க கூடியது; ஆனால் பயிா் பாதிப்பு கணக்கீடு செய் செயலி முறை தற்போதைய நிலையில் சாத்தியமில்லை. செயலிமுறையால் குத்தகை நிலம், கோயில் நிலங்களில் சாகுபடி செய்பவா்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போகும். எனவே, செயலி முறையை ரத்து செய்து வழக்கமான முறையில் பாதிப்பை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

ஊரக திறனாய்வுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 4,149 போ் எழுதினா்

SCROLL FOR NEXT