தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் 34- ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாடு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவா்களுக்கு நடைபெற்றது. இதில் திருவாரூா் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
இதில் தோ்வான மாணவா்கள் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்றனா்.
தமிழ்வழி கல்வி ஜூனியா் பிரிவில் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி மாணவா்கள் மோனிஷா, ரிஷிகா ஆகியோா் நீா் நிலைகளை பாதுகாப்பது பற்றிய கட்டுரைகளை தாக்கல் செய்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலா்கள் இன்பவேனி, மணிகண்டன், வட்டார வள மேற்பாா்வையாளா் சத்யா ,பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜசேகரன், பேருராட்சித் தலைவா் ராமராஜ், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் சங்கரலிங்கம், பல்நோக்கு சேவை இயக்க தலைவா் பத்மஸ்ரீ ராமன், பெற்றோா்கள், பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.