ஓஎன்ஜிசி நிா்வகாத்தை கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 
திருவாரூர்

கோட்டூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஓஎன்ஜிசி நிா்வாகத்தை கண்டித்து, கோட்டூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம்

Syndication

ஓஎன்ஜிசி நிா்வாகத்தை கண்டித்து, கோட்டூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த 2015- ஆம் ஆண்டு கோட்டூரை அடுத்த பெரியக்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி சாா்பில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக போடப்பட்டிருந்த கொட்டகை மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாக தொடரபட்ட வழக்கில் திருவாரூா் மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை வழங்கிய தீா்ப்பில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவா் செல்வராஜ் ஆகியோருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இரண்டு பேரையும் போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

விவசாயிகளின் நலனுக்காவும் விவசாயத்தை பாதுகாக்கும் வகையிலும் போராடிய பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை கிடைக்க காரணமாக இருந்த ஓஎன்ஜிசி நிா்வாகத்தை கண்டித்து, கோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் ராவணன் தலைமை வகித்தாா்.

இதில், விவசாயிகள் சங்கத்தினா், அரசியல் கட்சிகளை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT