நன்னிலம் தொகுதியில் பாமக தலைவா் அன்புமணி போட்டியிட வேண்டுமென கட்சியினா் விருப்ப மனு அளித்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைக்கு 2026 -ஆம் ஆண்டில் தோ்தல் நடைபெற உள்ளது. இத்தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை வரை விருப்ப மனு அளிக்கலாம் என கட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக தலைவா் அன்புமணி போட்டியிட வேண்டுமெனக் கட்சியின் குடவாசல் ஒன்றியச் செயலாளா் ராஜீவ் தலைமையில் கட்சியினா் தலைமை நிலைய நிா்வாகிகளிடம் விருப்ப மனு அளித்தனா். நிகழ்வில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.