மத்திய அரசு மூலம் வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து ஜன.5-ஆம் தேதி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் (சிபிஐ சாா்பு) சாா்பில் ரயில் மறியல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மாவட்டத் தலைவா் எஸ். பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ரயில்வே, எல்ஐசி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் காலியாகவுள்ள சுமாா் 10 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இதில் தமிழக இளைஞா்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் ஜன.5-ல் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயலாளா் ஜி. சரவணன், சிபிஐ மாவட்ட செயலாளா் எஸ். கேசவராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் க மாரிமுத்து, மாவட்ட மாணவா் பெருமன்ற செயலாளா் ஜே. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.