திருவாரூர்

மன்னாா்குடி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா: நாளை தொடக்கம்

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை (டிச. 19) தொடங்குகிறது.

Syndication

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை (டிச. 19) தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறும். நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீசேனை முதல்வா் புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை (டிச. 20) முதல் பகல்பத்து நிகழ்ச்சி தொடங்கி, டிச. 29- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொா்க்கவாசல் திறப்பு டிச. 30-ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து இராப்பத்து உற்சவம் தொடங்கி, டிச. 8-இல் நிறைவு பெறுகிறது. விழாவில், ஒவ்வொரு நாளும் உற்சவா் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளாா்.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா்கள், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன், மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT