திருவாரூர்

தொழிலாளா் சட்டத் தொகுப்பை திரும்பப் பெறக் கோரி சாலை மறியல்

தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் சிஐடியு சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Syndication

தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுவதால் தொழிலாளா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூா் தலைமை தபால் அலுவலகம் முன் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, திருவாரூா் புதிய ரயில் நிலையப் பகுதியிலிருந்து பேரணியாக வந்து மறியலில் பங்கேற்றனா். சிஐடியு மாநில துணைத் தலைவா் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினா் இரா. மாலதி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அனிபா, மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, மாவட்டபொருளாளா் கே. கஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்ளிட்ட 140 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT